கடை உரிமையாளர் தீக்குளிக்க முயற்சி :
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒலி பெருக்கி கடை உரிமையாளர் கணேசன் (50) மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாளையங்கோட்டை சிவன் கோயில் மேலரதவீதியை சேர்ந்தவர் கணேசன். மாவட்ட ஆட்சியர்அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த அவர்திடீரென்று உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீஸார் அவரை தடுத்து நிறுத்தி, அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர், அவரிடம் விசாரணைநடத்தப்பட்டது. ஆட்சியர் அலுவலகத்தில் அவர் அளித்த மனு:
பாளையங்கோட்டை சிவன்கோயில் மேலரதவீதியில் சவுண்ட் சர்வீஸ் நடத்தி வருகிறேன். இருபோலீஸ்காரர்கள் மீது உயர்அதிகாரிகளிடம் புகார் அளித்ததால், எனக்கும் அவர்களுக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. அவர்கள் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தொழில் செய்யவிடாமல் இடையூறுகளை செய்து வருகிறார்கள். என்னையும் எனது குடும்பத்தையும் ஒழித்து கட்டிவிடுவதாக மிரட்டி வருகிறார்கள். கடையை மூடவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. மாவட்ட ஆட்சியர் வழிகாட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
