

அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்த வைப்பம் கிராமத்தில் உள்ள இருளர் தெருவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படு கிறது.
இதுதொடர்பாக, ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, இருளர் தெரு மக்கள் நேற்று அதே கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த கீழப்பழுவூர் போலீஸார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.