

வேலைவாய்ப்பற்றோர், மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் மூலமாக உதவித் தொகை பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யாவெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டத்தின் கீழ், சென்ற காலாண்டு வரை 195 பதிவுதாரர்கள் பயன் பெற்று வருகின்றனர்.
இத்திட்டத்தின்படி பதிவுதாரர்களுக்கு, கல்வித் தகுதி அடிப்படையில் கீழ்காணும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு கீழ் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.600, பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி / அதற்கு சமமான படிப்புக்கு மாதம் ரூ.750, பட்டதாரிகள் / முதுநிலைப் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது.
இந்த உதவித்தொகையைப் பெற கீழ் குறிப்பிட்டுள்ள தகுதி கொண்ட பதிவுதாரர்கள், வேலைவாய்ப்பகத் துக்கு நேரில் வந்து விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு செய்திருக்க வேண்டும். வருமானஉச்சவரம்பு ஏதுமில்லை. பயனாளிகளுக்கு, 10 ஆண்டுகள் தொடர்ந்து உதவித்தொகை வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளி என்ற முன்னுரிமையை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் முழுநேர மாணவராக இருக்கக்கூடாது.
அரசு, தனியார் துறையிலோ அல்லது சுயவேலைவாய்ப்பிலோ ஈடுபடுபவராக இருத்தல்கூடாது. பள்ளி அல்லது கல்லூரி கல்வியை, முழுவதுமாக தமிழகத்தில் முடித்திருக்க வேண்டும் அல்லது பெற்றோர் /கணவர் / மனைவி / பாதுகாவலர்குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருத்தல் வேண்டும்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள தேசியமயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியின் கிளையில் சேமிப்புக்கணக்கு மற்றும் கணக்கு எண் வைத்திருக்க வேண்டும். தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள், இதுவரை விண்ணப்பம் பெறாதவர்கள் உடனடியாக விண்ணப்பத்தைபெற்று, முழு விவரங்களை பூர்த்திசெய்து மாவட்ட வேலைவாய்ப்புமற்றும் தொழில்நெறி வழிகாட்டும்அலுவலகத்தில் அளித்து பயன்பெறலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.