பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை இடம் மாற்றக் கோரிக்கை :

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள  டாஸ்மாக் கடையை இடம் மாற்றக் கோரிக்கை :
Updated on
1 min read

குமாரபாளையத்தில் சேலம் - பள்ளிபாளையம் பிரிவு சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமாரபாளையம் சேலம் சாலை பள்ளிபாளையம் பிரிவு பகுதியில் பழைய முருகன் தியேட்டர் அருகில் டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு காட்டூர், விட்டலபுரி, காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கான பிரதான சாலை செல்கிறது. இதனால் நாள் முழுவதும் இச்சாலையில் வாகனப் போக்குவரத்து மிகுந்து காணப்படும்.

இந்நிலையில், டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கும் நபர்கள் மதுபானக் கூடம் வசதி யில்லாததால் கடையின் முன்பு கீழே அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும், மதுபோதையில் அவ்வழியாக செல்லும் பெண்கள் உள்ளிட்டோரிடம் ரகளை செய்வதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல நிலவுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.

இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் டாஸ்மாக் மதுபானக் கடை அகற்றி ஒதுக்குப்புறமான இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும், என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in