

கரோனா தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்ள தூத்துக் குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக டீன் டி.நேரு தெரிவித்தார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கரோனா மூன்றாவது அலை பரவக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு வாரம் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கின. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. டீன் டி.நேரு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டார். உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, துணை மருத்துவ கண்காணிப்பாளர் குமரன் மற்றும் மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது டீன் பேசியதாவது: ஆகஸ்ட் 2-ம் தேதி (இன்று) கைகளை சுத்தம் செய்தல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது கரோனா உள்நோயாளி களாக 30 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3-வது அலையை எதிர்கொள்ள தேவையான அனைத்து வசதி களும் மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளன. ஆக்சிஜன் ஜெனரேட்டர் கருவி நிறுவும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப் படவுள்ளனர். குழந்தைகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட தனிப்பிரிவு அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன என்றார் அவர்.
கோவில்பட்டி