

கரோனா தொற்று 2-வது அலையின்போது திருப்பூர் மாவட்டத்தில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்நிலையில், மூன்றாவது அலையை தவிர்க்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாநகர காவல்துறை சார்பில் வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்களுக்கான கரோனா தொற்று தடுப்பு மற்றும் வழிகாட்டுநெறிமுறைகள் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் திருப்பூரில் நேற்று நடைபெற்றது.
மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி தலைமை வகித்தார். மாநகரக் காவல் ஆணையர் வே.வனிதா, உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை உட்பட பலர் பங்கேற்றனர்.
உணவு விடுதி உரிமையாளர் சங்க நிர்வாகிகள், திருமண மண்டப உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.