பட்டப் பகலில் 15 பவுன் நகைக் கொள்ளை :

பட்டப் பகலில் 15 பவுன் நகைக் கொள்ளை :
Updated on
1 min read

விழுப்புரம் அருகே பூத்தமேடு பகுதியில் உணவகம் நடத்தி வருபவர் மணிகண்டன்(47). நேற்று இவரும் இவர் மனைவி மகேஸ்வரியும் வீட்டை பூட்டிக் கொண்டு உணவகத்துக்கு வந்து விட்டனர். பிற்பகல் மகேஸ்வரி வீட்டிற்கு சென்றபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதேபோல் கஞ்சனூர் காவல் சகரத்திற்குட்பட்ட அரசலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மனைவி சாந்தி. இவர் நேற்று காலை தன் கணவருடன் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வேலைக்குச் சென்று, பிற்பகல் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 4 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கஞ்சனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in