

சேலத்தில் ரூ.1.60 கோடி குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை பதுக்கிய வழக்கில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், 5 பேரை தேடி வருகின்றனர். ஆத்தூரில் வீட்டில் ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை பதுக்கிய ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் சீலநாயக்கன்பட்டி அருகேயுள்ள ஊத்துக்காட்டில் நேற்று முன்தினம் லாரி ஷெட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு லாரிகளில் ஒரு லாரியில் 131 மூட்டையும், மற்றொரு லாரியில் 117 மூட்டைகளில் ரூ.1.10 கோடி மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், சேலம் நாழிக்கல்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார், கர்நாடக மாநிலத்தில் இருந்து புகையிலைப் பொருட்களை கடத்தி வந்து, விற்பனை செய்ய முயன்றது தெரிந்தது.
இதுதொடர்பாக சேலம் குகை சுப்பிரமணி (63), தாதகாப்பட்டி நல்லப்பன் (35) ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான செந்தில்குமாரை தேடி வருகின்றனர்.
இதேபோல, நேற்று முன்தினம் உடையாப்பட்டி பை-பாஸ் ரோட்டில் நின்ற மினி லாரியில் 72 மூட்டைகளில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் இருப்பதை போலீஸார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக ஓட்டுநர் பூசைராஜ் என்பவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் தலைமறைவான 4 பேரை தேடி வருகின்றனர்.
ஆத்தூரில் பதுக்கல்