சேலம் மாவட்டத்தில் இன்று கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி போட ஏற்பாடு :

சேலம் மாவட்டத்தில் இன்று கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி போட ஏற்பாடு :
Updated on
1 min read

சேலம் மாவட்டத்தில் உள்ள 138 மையங்களில் இன்று (1-ம் தேதி) பொதுமக்களுக்கு கோவேக்சின் இரண்டாம் தவணையும், கோவிஷீல்டு முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் இன்று (1-ம் தேதி) 138 மையங்களில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த மொத்தம் 6 ஆயிரத்து 80 கோவேக்சின் மற்றும் 11 ஆயிரத்து 500 கோவிஷீல்டு தடுப்பூசிகள் என மொத்தம் 17 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் படி பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட தடுப்பூசி மையங்களுக்கு சென்று 2-ம் தவணை கோவேக்சின் தடுப்பூசி மற்றும் முதல் தவணை, இரண்டாம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசியும் செலுத்திக் கொள்ளலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அவரவர் வசிக்கும் இடங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in