கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் :

கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்.
கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்.
Updated on
1 min read

படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் வி.கே.பெருமாள் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கு 5 மாதங்களாக தர வேண்டிய ரூ.18.39 கோடி பாக்கித் தொகையை வழங்க வேண்டும். ஊக்கத் தொகை டன் ஒன்றுக்கு ரூ.142.50-ஐ நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை பேரவைக் கூட்டத்தை கூட்டி வரவு செலவு கணக்கை சமர்ப்பிக்க வேண்டும். கரும்பு வெட்டும் ஆட்களை ஆலை நிர்வாகம் ஏற்பாடு செய்து வெட்டுக் கூலியை வழங்க வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாநிலச் செயலர் சி.பெருமாள், மாவட்டச் செயலர் கே.நேரு உள்ளிட்ட நிர்வாகிகள், கரும்பு விவசாயிகள் பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in