கிணற்றில் விழுந்த பெண் புள்ளிமான் உயிருடன் மீட்பு :

அந்தியூர் அருகே கிணற்றில் விழுந்த புள்ளிமானை வனத்துறையினர் வலை மூலம் மீட்டனர்.
அந்தியூர் அருகே கிணற்றில் விழுந்த புள்ளிமானை வனத்துறையினர் வலை மூலம் மீட்டனர்.
Updated on
1 min read

அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் புள்ளிமானை வனத்துறையினர் மீட்டு, வனப்பகுதியில் விட்டனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பெருமுகை கிராமத்தில் உள்ள லட்சுமணராஜ் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் நேற்று காலை புள்ளி மான் ஒன்று தவறி விழுந்தது. கிணற்றில்விழுந்த மான், தொடர்ந்து நீரில் நீந்தியபடியே சுற்றி வந்தது. இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள், வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். வனவர் சண்முகவடிவு தலைமையிலான வனத்துறையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கிணற்றில் வீசப்பட்ட வலையில் மான் சிக்கிய நிலையில், உயிருடன் மீட்கப்பட்டது. அதன்பின்னர், உறம்புகிணறு வனப்பகுதியில் மான் விடுவிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in