

ஈரோட்டில் போலீஸார் நடத்திய சோதனையில் 50 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு கருங்கல்பாளையம், கொங்கலம்மன் கோயில் வீதி, நாடார்மேடு, கொல்லம்பாளையம், 46 புதூர் உட்பட 15 இடங்களில் மளிகைக் கடை மற்றும் கிடங்குகளில் போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டனர். இதில், கொங்கலம்மன் கோயில் வீதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
இது தொடர்பாக மதன் ராம் (20), வினோத் (33), நாகராஜன் ஆகிய 3 பேரை கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 50 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.