போக்ஸோ சட்டப் பிரிவில் கைதானவருக்கு 8 ஆண்டு சிறை : � திண்டுக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

போக்ஸோ சட்டப் பிரிவில் கைதானவருக்கு 8 ஆண்டு சிறை :  �	திண்டுக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து போக்ஸோ சட்டத்தில் கைதானவவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், புங்கம்பாடியைச் சேர்ந்த ஜோசப்பெனிட்டோ (41), கடந்த 2018-ல் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். இது தொடர்பாக போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஜோசப்பெனிட்டோவை சாணார்பட்டி போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. ஜோசப்பெனிட்டோவுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி புருஷோத்தமன் தீர்ப்பளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in