

திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பாட்டில் இல்லாத அரசு இலவச செட்டாப் பாக்ஸ்களை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் திரும்ப ஒப்படைக்காவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப் படும் என ஆட்சியர் முருகேஷ் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தி.மலை மாவட்டத்தில் குறைந்த மாத சந்தா கட்டணத்தில் டேக் டிவி சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதில், செயலாக் கத்தில் இல்லாத செட்டாப் பாக்ஸ்களை செயலாக்கம் செய்ய வேண்டும். அல்லது தொடர்ந்து 3 மாதங்களாக செயலாக்கத்தில் இல்லாத செட்டாப் பாக்ஸ்களை திரும்பப்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் 3 மாதங்களுக்கு மேல் செயலாக்கத்தில் இல்லாதஅரசு கேபிள் டிவி நிறுவன செட்டாப் பாக்ஸ்களை செயலாக்கம் செய்ய வேண்டும். அல்லது அவற்றை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்பப்பெற்று மாவட்ட அரசு கேபிள் டிவி நிறுவன அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
அரசு இலவசமாக வழங்கும் செட்டாப் பாக்ஸ்களை பொது மக்கள் பயன்படுத்த வேண்டும். அல்லது அதனை ஆபரேட்டர் களிடம் ஒப்படைக்க வேண்டும்.
மேலும், வாடிக்கையாளர் களிடம் இருந்து செட்டாப் பாக்ஸ்களை திரும்பப் பெற்று அதனை ஒப்படைக்க வேண்டியது கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பொறுப்பாகும்.
தவறும் பட்சத்தில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் செயலுக்காக சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என தெரிவித்துள்ளார்.