தி.மலை கோயிலில் ரூ.79.74 லட்சம் உண்டியல் காணிக்கை :

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. படம்:இரா.தினேஷ்குமார்.
தி.மலை அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. படம்:இரா.தினேஷ்குமார்.
Updated on
1 min read

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை மூலம் உண்டியல்கள் வைக்கப்பட்டு, பக்தர்களிடம் இருந்து காணிக்கை பெறப்படுகிறது.

அதேபோல், கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயில், அஷ்டலிங்க கோயில்கள், திருநேர் அண்ணாமலை கோயில், துர்க்கை அம்மன் கோயிலிலும் உண்டியல்கள் வைக்கப்பட்டு காணிக்கை பெறுவது வழக்கம். அவ்வாறு உண்டியல் களில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை, ஒவ்வொரு மாதமும் கணக்கிடப்படும். அதன்படி, தி.மலை அண்ணா மலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.

கோயில் ஊழியர்கள், தன்னார் வலர்கள் ஆகியோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 50 உண்டியல்களில் சேகரிக்கப்பட்ட காணிக்கையை வகைப்படுத்தி கணக்கிடப்பட்டது. அதில், ரொக்கமாக ரூ.79 லட்சத்து 74 ஆயிரத்து 868 மற்றும் 354 கிராம் தங்கம், 512 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in