

அரிசி மொத்த வியாபாரம் செய்வ தாக கூறி கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த வியாபாரி மீது நடவடிக்கை எடுத்து முதலீடு செய்த பணத்தை மீட்டுத் தர வேண்டும் என திருப்பத்தூர் எஸ்.பி., அலுவலகத்தில் அரிசி வியாபாரி புகார் அளித்துள்ளார்.
திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு, சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் அரிசி வியாபாரி ராமசந்திரமூர்த்தி(46). இவர், திருப்பத்தூர் எஸ்.பி., அலுவல கத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார்.
அம்மனுவில் கூறியிருப்ப தாவது, “ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியைச் சேர்ந்த நான் கடந்த 2002-ம் ஆண்டு முதல் அரிசி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். இந்நிலையில், கடந்த 2005-ம் ஆண்டு திருப்பத்தூரில் அரிசி வியாபாரம் செய்து வந்த தாமோதிரன் (42) என்பவர் எனக்கு தொழில் ரீதியாக அறிமுகம் ஆனார். அதன் பிறகு கூட்டாக அரிசி மொத்த வியாபாரம் செய்ய கடந்த 2013-ம் ஆண்டு ரூ.20 லட்சம் முதலீடு செய்து அவருடன் சேர்ந்து வியாபாரம் செய்தேன். அரிசி நிறுவனத்தில் இருந்து மாதந்தோறும் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ.1 கோடிக்கு சீட்டு தொகையும் செலுத்தி வந்தோம்.
கொலை மிரட்டல்
எனக்கு சேரவேண்டிய பணத்தை கேட்ட போது எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே, தாமோதிரன் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு சேர வேண்டிய தொகையை மீட்டு தர வேண்டும்’’ என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனுவை பெற்ற எஸ்.பி., சிபி சக்கரவர்த்தி இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு உத்தரவிட் டுள்ளார்.
அதன்பேரில், காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக தெரிவித்தனர்.