திருப்பூர் பவர்டேபிள் உரிமையாளர்கள் கூலி உயர்வு கோரி வேலை நிறுத்தம் :

திருப்பூர் பவர்டேபிள் உரிமையாளர்கள் கூலி உயர்வு கோரி வேலை நிறுத்தம் :
Updated on
1 min read

திருப்பூரில் உள்ள பெரிய பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பின்னலாடைகள் தைத்து அளிக்கும் சிறிய நிறுவனங்களுக்கு கூலி உயர்வு தரக்கோரி பவர்டேபிள் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது.

இதில், கூலி உயர்வு தொடர்பாக 4 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட ஒப்பந்தம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் காலாவதியான நிலையில், அதனை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் 2000-க்கும் மேற்பட்ட பவர்டேபிள் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப்போராட்டத்தால் பவர்டேபிள் நிறுவனங்களில் பணி செய்து வரும் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பை சந்தித்துள்ளனர்.

மேலும் நாளொன்றுக்கு ரூ.5 கோடி வரையிலான பின்ன லாடைத் துணிகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து மேலும் அவர்கள்கூறும்போது, ‘‘ஒவ்வொரு முறையும் பின்னலாடை உற்பத்தியாளர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூலி உயர்வுஒப்பந்தம் போடப்படும் நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக இன்னும் புதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. எரிபொருட்கள், நூல் விலை உயர்வால், பவர்டேபிள் நிறுவனங்களில் உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளது. தற்போதைக்கு 20 சதவீத கூலி உயர்வை வழங்கவேண்டும். இதற்கான பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க வேண்டும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in