

கடலூர் மாவட்டத்தில் நேற்று 63 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 60,241 பேருக்கு தொற்று ஏற்பட்டு,நேற்று 86 பேர் உட்பட 58,642 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 712 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 3 பேர்உயிரிழந்தது உட்பட மாவட்டத்தில் இதுவரை 807 பேர் உயிரிழந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 45பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 28,921பேருக்கு தொற்று ஏற்பட்டு, நேற்று 71பேர் உட்பட 28,181 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 542பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒருவர் உயிரிழந்தது உட்பட மாவட்டத்தில் இதுவரை 198 பேர் உயிரிழந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 41பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் 43,764 பேருக்கு தொற்று ஏற்பட்டு, நேற்று 53பேர் உட்பட 42, 946 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 478 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 340 பேர் உயிரிழந்துள்ளனர்.