அமமுகவில் தினகரன் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார் : வேப்பனப்பள்ளியில் கே.பி.முனுசாமி தகவல்

அமமுகவில் தினகரன் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார் :  வேப்பனப்பள்ளியில் கே.பி.முனுசாமி தகவல்
Updated on
1 min read

அமமுகவில் தினகரன் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, அதிமுக துணை ஒருங்கிணைப் பாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ தெரிவித்தார்.

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி வேப்பனப் பள்ளியில் நடந்த ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உப்பை திண்ணவன் தண்ணீர் குடித்துத் தான் ஆக வேண்டும் என்பது டிடிவி தினகரனுக்கு தான் பொருந்தும். ஏற்கெனவே ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் உப்பை தின்றவர் தினகரன். அதற்காக பலமுறை தண்ணீர் குடித்துக் கொண்டிருப்பவர் தான் தினகரன். அதனால் தான் பல நீதிமன்றங்களின் படிக்கட்டுகளை மிதித்துக் கொண்டிருக்கிறார்.

தினகரன் அவரது கட்சிக்குள்ளேயே ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். அவருடன் இருந்த ஒரு சிலர் கூட தற்போது அவரை விட்டுச் சென்று விட்டார்கள். மீதமுள்ளவர்கள் உடன் வைத்து கொள்ளவே, தினகரன் தவறான கருத்துகளை தெரிவித்துவருகிறார். தமிழக மக்களின் நலன் கருதியே இபிஎஸ், ஓபிஎஸ் பிரதமரை சந்தித்துள்ளனர். கரோனா 3-வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசுடன் அரசியல் வேறுபாடு இன்றி செயல்பட நாங்கள் தயாராக உள்ளோம். இவ்வாறு கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in