

தேர்தலின்போது அளித்த வாக்கு றுதிகளை திமுக அரசு நிறை வேற் றவில்லை என்று கூறி, அதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று அதிமுகவினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் காட்டூர் சக்தி நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் ப.குமார் தலைமை வகித்தார். பகுதிச் செயலாளர் தண்டபாணி, சிந்தாமணி கூட்டுறவு சங்கத் தலைவர் எஸ்.சகாதேவ் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல, காஜாமலை லூர்துசாமி பிள்ளை காலனியில் முன்னாள் எம்பியும், கட்சியின் அமைப்புச் செயலாளருமான டி.ரத்தினவேல், மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் அஜீஸ், திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் தில்லைநகரில் உள்ள கட்சி அலுவலகம் அருகே மாவட்டச் செயலாளர் மு.பரஞ்ஜோதி தலைமையில் முன்னாள் அமைச் சர்கள் கு.ப.கிருஷ்ணன், எஸ்.வளர் மதி, மாநகர் மாவட்டம் சார்பில் தென்னூரில் உள்ள கட்சி அலுவ லகம் முன் மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி என்.நட ராஜன் தலைமையில் இளைஞரணி மாநில இணைச் செயலாளர் ஜெ.சீனிவாசன், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் சீ.கார்த்தி கேயன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இதே போல, மாவட்டத்தில் மொத்தம் 84 இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டத்தில்....
பெரம்பலூர் மாவட்டத்தில்...
அரியலூர் மாவட்டத்தில்....
இதேபோல, மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், ஆண்டிடம், திருமானூர், செந்துறை, உடையார் பாளையம், தூத்தூர்,வெங்கனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில்...
தஞ்சாவூர் மாவட்டத்தில்...
ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் ஆர்.வைத்திலிங்கம் செய்தியாளர் களிடம் கூறியது: திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக கூறியதை குறைக்க வேண்டும்.
அதிமுகவினர் மீது பொய் வழக்குப் போடுவதை நிறுத்த வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
மத்திய அரசு மேகேதாட்டுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தாவிட்டால், மத்திய அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் ஆர்ப் பாட்டம் நடத்தப்படும் என்றார்.
இதேபோல, கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் அதிமுக நகரச் செயலாளர் ராம.ராமநாதன் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பட்டுக்கோட்டை, திருவை யாறு, பாபாநாசம், ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை, மயிலாடுதுறை...
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் கடைவீதியில் மாவட்ட அதிமுக செயலாளர் பவுன்ராஜ் தலைமையிலும், வழுவூரில் முன்னாள் மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகை, மயிலாடுதுறை மாவட் டங்களில் மொத்தம் 1,750 இடங் களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டத்தில்...