புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்க மதிமுக கோரிக்கை :

புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்க மதிமுக கோரிக்கை  :
Updated on
1 min read

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றிய மதிமுக செயலாளர் ராம.உதயசூரியன் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர், கடையம் ஒன்றியங்களில் பேருந்து வசதியில்லாத கிராமங்களை நகரங்களுடன் இணைக்கும் வகையில் புதிய பேருந்து வழித்தடத்தை உருவாக்க வேண்டும். அதன்படி, தென்காசியில் இருந்து ஆலங்குளத்துக்கு பாவூர்சத்திரம், ஆவுடையானூர், கரிசலூர், பூலாங்குளம், ஆண்டிபட்டி, கரும்பனூர் வழியாகவும், தென்காசியில் இருந்து முக்கூடலுக்கு மத்தளம்பாறை, திரவியநகர், அரியப்பபுரம், ஆவுடையானூர், மயிலப்பபுரம், வெங்காடம்பட்டி, பூலாங்குளம், கோவிலூற்று, லட்சுமியூர், வடமலைப்பட்டி, ராம்நகர், புதுப்பட்டி வழியாகவும் புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கினால் பல கிராம மக்கள் பயன்பெறுவர். நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in