தேனியில் வாகனம் மூலம் கரோனா தடுப்பூசி :

தேனியில் வாகனம்  மூலம் கரோனா தடுப்பூசி :
Updated on
1 min read

தேனி மாவட்டத்தில் இதுவரை கரோனா தடுப்பூசி முதல் தவணையாக 2 லட்சத்து 45 ஆயிரத்து 813 பேருக்கும், இரண்டாம் தவணையாக 47 ஆயிரத்து 84 பேர் என மொத்தம் 2 லட்சத்து 92 ஆயிரத்து 897 பேருக்கும் போடப்பட்டுள்ளது. மேலும் 13 ஆயிரத்து 62 மாற்றுத்திறனாளிகளில் 2 ஆயிரத்து 130 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தடுப்பூசி பணிக்காக சுகாதா ரத்துறை, தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில் 5 மருத்துவ வாகனங்கள் மூலம் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இத்தகவலை தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரன் தெரி வித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in