

திண்டுக்கல் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.மணிமாறன்(80) உடல்நலக் குறைவால் காலமானார்.
திண்டுக்கல் தொகுதியில் திமுக சார்பில் 1996-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அடுத்து வந்த தேர்தலில் திமுகவில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன்பின் அவர் மதிமுகவில் இணைந்தார்.
பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி சமத்துவ மக்கள் கட்சியில் சேர்ந்தார். அதன்பின் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் நேற்று உடல்நலக் குறைவு காரணமாக மணிமாறன் இறந்தார்.