

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஒன்றிய அதிமுக செயலாளர் செந்தில், கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதன்பின் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்திலும் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
இந்நிலையில், சிறையில் உள்ள இவரை, தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த சிவசங்கரி சந்தித்துப் பேசியுள்ளார். பணியில் இருந்தபோது, காவலர் சீருடையிலேயே, காவல் துறை உயர் அலுவலர்களுக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமல் சிறையில் அடைக்கப்பட்டவரை சிவசங்கரி சந்தித்தது குறித்து, தஞ்சாவூர் எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய்க்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, சிவசங்கரியை பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய் நேற்று உத்தரவிட்டார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக ஒன்றியச் செயலாளரை, சிவசங்கரி எதற்காக சந்தித்தார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.