

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் பா. விஷ்ணு சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாநகராட்சி, தச்சநல்லூர் மண்டலம் வார்டு எண் 5-ல் ஏற்கெனவே இயங்கி வந்த தச்சநல்லூர் மண்டல பழைய அலுவலக கட்டிடம் சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமானப் பணி நடைபெற்று வருகின்றது.
பழைய தச்சநல்லூர் மண்டல அலுவலக வளாகத்தினுள் அமைந்துள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு செல்லும் பிரதான குழாய் மற்றும் நீர் வெளியேற்றும் குழாய் மண்டல அலுவலக கட்டிடத்தின் வழியாக செல்வதால் அவற்றை அகற்றி விட்டு, இடம் மாற்றி புதிதாக குழாய்களை பதிக்கும் பணி நடைபெற உள்ளது.
இதன் பொருட்டு மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு நீரேற்ற த்தை நிறுத்தம் செய்ய வேண்டியுள்ளதால் தச்சநல்லூர் மண்டலத்தில் வார்டு எண் 5 மற்றும் 4 -க்கு உட்பட்ட பகுதிக ளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் வழங்க இய லாத நிலை உள்ளது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம் மற்றும் திருநெல்வேலி ஆகிய 4 மண்டலங்களில் செயல்பட்டு வரும் கணினி வரி வசூல் மையங்களில் மென்பொருள் பராமரிப்பு பணி நடைபெறுவதால் வரும் 31-ம் தேதி காலை 10 மணி வரை இந்த மையங்கள் இயங்காது. இணையதள பணபரிவர்த்தனைகள் அனைத் தும் நடைபெறாது.