தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்கக் கோரி மனு :

தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்கக் கோரி மனு :
Updated on
1 min read

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட பொதுஜன பொதுநலச் சங்கத் தலைவர் முகம்மது அய்யூப் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.

அதில், திருநெல்வேலியில் சுற்றித்திரியும் நாய்களுக்கு நாய்களுக்கு கருத்தடை செய்து அவற்றின் இனப் பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் உள்ளது. விலங்குநல ஆர்வலர்கள் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே தெருநாய்களுக்கு இலவசமாக கருத்தடை சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in