

கோவில்பட்டி: ஓட்டப்பிடாரம் அருகே வடக்கு கைலாசபுரத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மலைச்சாமி. இவரது மகள் மதுபாலா (16), பசுவந்தனை அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் டிவி சுவிட்சை போட்டபோது, மின்சாரம் தாக்கி மதுபாலா உயிரிழந்தார். பசுவந்தனை காவல் ஆய்வாளர் (பொறுப்பு) மாரியம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.