

திருச்சி: பாரதிய கிசான் சங்க மாநில பொதுச் செயலாளர் என்.எஸ்.பார்த்தசாரதி நேற்று முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் கடன் தள்ளுபடியில் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பதை ஆய்வு செய்யும் பணிகள் ஜூலை 31-ம் தேதி நிறைவு பெறும். ஆய்வு அறிக்கையின் மீது அரசு முடிவெடுக்க 30 நாட்கள் ஆகலாம். இந்த ஆய்வில் திருப்தி இல்லையெனில் கூட்டுறவு தணிக்கையாளர்களைக் கொண்டு மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு திருப்தி ஏற்படும் பட்சத்தில் மட்டுமே கடன் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், உரிய காலத்தில் சாகுபடி பணிகளுக்கு கடன் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ள அனைத்து சிறு,குறு விவசாயிகளுக்கு உடனடியாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.