விஷம் குடித்த தொழிலாளி உயிரிழப்பு: மனைவி, 2 மகள்களுக்கு சிகிச்சை :

விஷம் குடித்த தொழிலாளி உயிரிழப்பு: மனைவி, 2 மகள்களுக்கு சிகிச்சை :
Updated on
1 min read

திருச்சி மாவட்டம் துறையூர் சந்தை சாலை பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன்(40). இவரது மனைவி மாலா(33). இத்தம்பதியருக்கு சஞ்சனா(9), சஹானா (3) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

சென்னையிலுள்ள ஹார்டுவேர் கடை ஒன்றில் பணி செய்து வந்த சுப்ரமணியன், ஓராண்டுக்கு முன் வேலையை விட்டுவிட்டு துறையூருக்கு திரும்பினார். அதன்பின் சரியான வேலை கிடைக்காததாலும், உடல்நலக்குறைவாலும் அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் இவரது வீட்டின் கதவு திறக்கப்படாததால், சந்தேகத்தின்பேரில் அக்கம்பக்கத்தினர் வீட்டை திறந்து பார்த்தனர். அப்போது சுப்ரமணியன் சடலமாக இறந்து கிடந்தார். மாலா, சஹானா, சஞ்சனா ஆகியோர் மயங்கிய நிலையில் இருந்தனர்.

மேலும் அனைவரும் விஷம் குடித்து இருந்தது தெரியவந்தது. உடனடியாக அவர்களை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து துறையூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in