

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் ரேஷன் கடைகளில் விநியோகம்செய்வதற்காக அரிசி மற்றும் பிறபொருட்கள் ரயில் மூலம் கொண்டு வரப்படுகிறது. நேற்று தெலங்கானாவில் இருந்து சரக்கு ரயில் மூலம் 2,500 டன் ரேஷன் அரிசி நாகர்கோவில் ரயில்நிலையத்துக்கு வந்தது. ரயிலில் இருந்து இறக்கப்பட்டு கோணம் மற்றும் பள்ளிவிளை அரசு குடோனுக்கு அரிசி மூட்டைகள் கொண்டு செல்லப்பட்டன. அங்கிருந்து ரேஷன் கடைகள் வாரியாக பிரித்து அனுப்பப்படவுள்ளது.