நிலத்தை அளவீடு செய்து தரக்கோரி மனு :

நிலத்தை அளவீடு செய்து தரக்கோரி மனு :
Updated on
1 min read

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த துரைபெரும்பாக்கம் பகுதியில் கடந்த 1996-ம் ஆண்டு ஆதி திராவிடர் நலத்துறை சார்பாக 85 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த இடத்தை அதிகாரிகள் இன்றளவும் அளந்து தரவில்லை என கூறப்படுகிறது. எனவே, வீட்டுமனைப் பட்டா இடத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி வருகின்றனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் வீட்டு மனைப் பட்டாவை உடனடியாக அளந்து வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். பின்னர், கோரிக்கை தொடர்பான மனுவை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரனிடம் அளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in