

கடலூர் வட்டாரம் பில்லாலி, திருமாணிக்குழி, மருதாடு ஆகிய கிராமங்களில் நேற்று மண் மற்றும் பாசன நீர் பரிசோதனை முகாம்கள் நடைபெற்றன.
கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் தமிழ்நாடு வேளாண் துறை சார்பில் நிரந்தர மண் ஆய்வுக் கூடம் செயல்பட்டு வருகிறது. இவ்வாய்வகத்தில் கடலூர் மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலிருந்து உதவி வேளாண் அலுவலர்களால் மண்மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய் வுக்கு அனுப்பப்பட்டு வருகின்றது. இம்முறையில் ஆய்வு முடிவுகள் பெறுவதற்கு 2 அல்லது 3 நாட்கள் ஆகும். இந்நிலையில் தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வத்தின் உத்தரவுபடி பெரம்பலூர் மற்றும்நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங் களில் செயல்படும் நடமாடும் மண் மாதிரி பரிசோதனை வாகனங்களை கடலூர் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த வாக னங்கள் அனைத்து வட்டாரங்களில் உள்ள கிராமங்களுக்கே நேரடி யாக சென்று மண் மற்றும் பாசன நீர் மாதிரிகளை சேகரித்து உடனுக்குடன் ஆய்வு செய்து தக்க பரிந்துரைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி பில்லாலி, திருமாணிக்குழி, மருதாடு ஆகிய கிராமங்களில் நடைபெற்ற மண் பரிசோதனை முகாமில் கடலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பூவராகன் பேசியது:
இதுவரை கடலூர் வட்டாரத்தின் அனைத்து பகுதிகளிலும் சேகரிக்கப்பட்ட மண்மாதிரிகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் நான்கு மண் வகைகளும், இருபது மண் பிரிவுகளும் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின் அடிப்படையில் பல்வேறு பயிர்களுக்கு தக்க ரசாயன மற்றும் இயற்கை உர பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
நடமாடும் மண் மாதிரி பரி சோதனை ஆய்வத்தில் பெரம்பலூர் வேளாண் அலுவலர்கள் வேல் முருகன், கண்ணன் மற்றும் அம்பிகா, நாகப்பட்டினம் வேளாண்அலுவலர் கௌதமி ஆகியோர்ஆய்வுப்பணிகளை மேற் கொண்டர்.
இதில் மண் பரிசோதனை செய்த விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர்கள் சிவமணி, பிரபாகரன், சங்கரதாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.