2 வழித்தடங்களில் நிறுத்தப்பட்டிருந்த நகரப் பேருந்துகள் மீண்டும் இயக்கம் :

2 வழித்தடங்களில் நிறுத்தப்பட்டிருந்த நகரப் பேருந்துகள் மீண்டும் இயக்கம் :
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஊராட்சி ஒன்றியம் சித்தமல்லியில் ஏற்கெனவே இயக்கி, நிறுத்தப்பட்ட 2 நகரப் பேருந்துகளை மீண்டும் இயக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதன்படி, பட்டுக்கோட்டையிலிருந்து பெருகவாழ்ந்தான் பகுதிக்கும், மன்னார்குடியிலிருந்து சித்தமல்லி பகுதிக்கும் ஏற்கெனவே இயக்கப்பட்டு, பின்னர் நிறுத்தப்பட்ட நகரப் பேருந்துகள் நேற்று முதல் மீண்டும் இயக்கப்பட்டன.

சித்தமல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேருந்துகளின் இயக்கத்தை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க.மாரிமுத்து, பட்டுக்கோட்டை எம்எல்ஏ அண்ணாதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்நிகழ்வில், கும்பகோணம் மண்டல பொதுமேலாளர் செல்வராஜ், மண்டல வணிக மேலாளர்கள் ராஜா, தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in