

குறிஞ்சிப்பாடி, வடலூர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 4 பெட்டிக் கடைகளுக்கு வருவாய்துறையினர் சீல் வைத்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி கடைவீதி, சூளாங்குறிச்சி, மணலூர் பேட்டை கடைவீதி, தியாகதுருகம் கடைவீதி ஆகிய பகுதிகளில் கடந்த இரு நாட்களாக போலீஸார் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட 84 கிலோ குட்கா போதைப் பொருட்கள் சிக்கியது. இப்பகுதியில் 13 கடைகளுக்கு சீல் வைத்து, 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.