

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரை அவதூறாகப் பேசிய நாகர்கோவில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் முன் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பாஜக கிழக்கு மாவட்டத் தலைவர் கஜேந்திரன் தலைமை வகித்தார். கோட்டப் பொறுப்பாளர் செந்தில்குமார், அரசு தொடர்பு துணைத் தலைவர் பாண்டுரங்கன், மாவட்ட மகளிர் அணித் தலைவி காளீஸ்வரி உட்பட ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர்.
மதுரை