திருச்சியில் ஆக்கிரமிப்பில் இருந்த - 11,000 சதுர அடி பூங்கா இடத்தை மீட்டது மாநகராட்சி :

திருச்சியில் ஆக்கிரமிப்பில் இருந்த -  11,000 சதுர அடி பூங்கா இடத்தை மீட்டது மாநகராட்சி :
Updated on
1 min read

திருச்சி மாநகரில் தனியார் ஆக்கி ரமிப்பில் இருந்த, பூங்கா வுக்காக ஒதுக்கப்பட்டிருந்த 11 ஆயிரம் சதுர அடி இடத்தை, நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று மாநகராட்சி அதிகாரி கள் மீட்டனர்.

திருச்சி மாநகராட்சி கோ.அபிஷேகபுரம் கோட்டம் வார்டு 45-க்குட்பட்ட சிங்கராய நகர் மனைப்பிரிவு 1985-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரி வுக்கு அனுமதி பெறப்பட்டது. இந்த மனைப்பிரிவுக்குட்பட்ட இடத்தில் பூங்கா அமைக்க 11,120 சதுர அடி இடம் ஒதுக் கப்பட்டிருந்தது.

இந்த இடத்தை சாமுவேல் லவ்ஜாய் மற்றும் நடராஜன் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இது தொடர் பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று 2012-ல் இந்த இடத்தை மாநகராட்சி தன் வசம் எடுத்து பூங்காவாக பராமரிக்க உத்தரவிட்டது. இதற்கு நிரந்தர தடை உறுத்துக்கட்டளை பரிகாரம் வழங்கக் கோரி திருச்சி மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் சாமுவேல் லவ்ஜாய் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு அண்மையில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து சிங்கராயர் நகரில் ஆக்கிரமிப் பில் இருந்த 11,120 சதுர அடி நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று மீட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in