நெல்லை, தென்காசி மாவட்டங்களில் - 195 அரசு நூலகங்கள் திறப்பு :

நெல்லை, தென்காசி மாவட்டங்களில்  -  195 அரசு நூலகங்கள் திறப்பு :
Updated on
1 min read

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள 195 அரசு நூலகங்கள் நேற்று திறக்கப்பட்டன.

கரோனா ஊரடங்கு தளர்வுகளை அடுத்து தமிழகத்தில் நூலகங்களை அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நூலகங்கள் நேற்று திறக்கப்பட்டன.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பாளையங் கோட்டையிலுள்ள மத்திய நூலகம் மற்றும் இரு மாவட்டங்களிலும் உள்ள நகர்ப்புற, ஊர்ப்புற நூலகங்கள் என 195 நூலகங்களும் நேற்று திறக்கப்பட்டதாக மாவட்ட நூலக அலுவலர் லெ. மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார்.

பகுதிநேர நூலகங்கள், மத்திய நூலகத்தில் மாற்றுத்திறனாளிகள் பிரிவு மற்றும் நடமாடும் நூலகம் ஆகியவை மட்டும் செயல்பட வில்லை. மத்திய நூலகத்துக்கு வருவோரின் உடல்வெப்பநிலை பரிசோதிக்கப் படுகிறது. கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in