

திருப்பூர் மாநகராட்சி பிச்சம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று (ஜூலை 24) கரோனா முதல் தவணை தடுப்பூசி 100 பேருக்கு செலுத்தப்படுவதாகவும், அதற்கான டோக்கன் நேற்றுவழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, மதியம் 1 மணி முதல் பள்ளி வளாகம் முன்பு 200-க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். அங்கு வந்த செவிலியர் 30 பேருக்கு மட்டும் டோக்கன் வழங்கினார். எஞ்சியவர்களுக்கு டோக்கன் வழங்கப்படவில்லை. இதனால், செவிலியர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள் மற்றும் அங்கு திரண்டிருந்த கட்சியினருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அனைவரும் கலைந்து சென்றனர்.