பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு :

பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு  :
Updated on
1 min read

குடியரசு தினவிழாவில் மத்திய அரசால் வழங்கப்படும் பத்ம விருதுக்கு தகுதியான மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

குடியரசு தினவிழாவின் (2022) போது, மத்திய அரசால் வழங்கப்பட உள்ள பத்ம விருதினைப்பெற விருப்பமுள்ள, பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்படும் மாற்றுத்திறனாளிகள், வரும் 29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை, ‘மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், ஈரோடு-11’ என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்ப வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in