

நாகர்கோவில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு தொழிற்சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் தங்கமோகன், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், தொழிற்சங்க நிர்வாகிகள் ஞானதாஸ், மகாலிங்கம், துரைராஜ், அந்தோணி உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.
அத்தியாவசிய பாதுகாப்பு சேவை அவசர சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
பாது காப்புத் துறை உற்பத்தியை தனியா ரிடம் ஒப்படைப்பதை நிறுத்த வேண்டும். ரயில்வே, மின்சாரம், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், காப்பீடு நிதி நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது. பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தென்காசி