இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் :

வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் கோட்ட அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் ஊழியர்களின் கூட்டமைப்பினர். படம்:வி.எம்.மணிநாதன்.

Updated on
1 min read

வேலூரில் அகில இந்திய பொதுத்துறை பொதுஇன்சூரன்ஸ் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. காட்பாடி-வேலூர் சாலையில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கோட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய ஜிஐசி எஸ்சி.எஸ்டி பரிஷாத் தென்மண்டல செயலாளர் சிட்டிபாபு தலைமை தாங்கினார். கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் டி.தமிழ்மணி, ஏஐஐஇஏ தென்மண்டல துணைத்தலைவர் வி.குபேந்திரன், காப்பீட்டு கழக ஊழியர் சங்க வேலூர் கோட்டத் தலைவர் எஸ்.ராமன், பென்ஷனர் அசோசியேஷன் மாவட்டத் தலைவர் பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பொது இன்சூரன்ஸ் நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தியும், பொது இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கும் நான்கு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு ஒப்பந்தம் பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in