

ஈரோடு மாவட்டம் பர்கூர் ஒந்தனை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (21). கட்டிடத்தொழிலாளி. இவர் 17 வயது மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தியதாக, மாணவியின் பெற்றோர் அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் மணிகண்டனை கைது செய்தனர்.
இதேபோல், சென்னம்பட்டி பகுதியைச் சேர்ந்த கவுரிசங்கர் (21), 15 வயதான மாணவியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கடத்திச் சென்றதாக பவானி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கவுரிசங்கரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.