

திருப்பத்தூர் நகராட்சியில் சாலைகளை சீரமைக்காவிட்டால் போராட்டம் நடத்துவதாக பொது மக்கள் அறிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் நகராட்சியில்கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடைத்திட்டம் கடந்த சில மாதங் களுக்கு முன்பு நிறைவடைந்தது. சாலைகள் சீரமைக்கும் பணிகள் கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப் பட்டது. இதில், ஒரு சில பகுதிகளில் சேதமடைந்த சாலைகள் சீரமைக் கப்படாமல் குண்டும், குழியுமா கவே உள்ளன. இதனால், அரசு ஒதுக்கீடு செய்து நிதி வீணாக்கப் பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் நகராட்சி 16-வது வார்டு திரு.வி.க நகரைச் சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, ‘‘எங்கள் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. எங்கள் பகுதியில் ஒவ்வொரு தெருவும் சேதமடைந்துள்ளன. இந்த சாலைகளை சீரமைப்பதற்காக கடந்த 2020-ம் ஆண்டு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. பின்னர் பணிகள் நடைபெற வில்லை. அதேபோல, எங்கள் பகுதியில் கழிவுநீர் கால்வாய் இல்லாத தெருக்களில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்தது. அதற்கான பணி களும் தொடங்கப்படாததால் மழைக்காலங்களில் கழிவுநீர், மழைநீருடன் கலந்து சாலையில் தேங்கியதால் ஜல்லி கற்களும் நீரில் அடித்துச்செல்லப்பட்டன.
தற்போது சாலை முழுவதும் பழையபடி குண்டும், குழியுமாக மாறியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர் பாக நகராட்சி அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முறையிட்டபோது, நகராட்சி அலுவலரான சீனிவாசன் என்பவர் எங்கள் பகுதிக்கு ஆய்வு செய்ய வந்தார்.
உடனடியாக சாலை அமைக்கவேண்டும் என்றால் மீண்டும் ஜல்லிக்கற்கள் கொட்ட வேண்டும். அதற்கு, ரூ.50 ஆயிரம் தேவைப் படுவதால் இத்தெருவைச் சேர்ந் தவர்கள் நிதி திரட்டி வழங்கினால் உடனடியாக சாலை அமைக்கும் பணிகள் தொடங்குவதாக தெரிவித் தார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி யடைந்த நாங்கள், திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் புகார் மனு அளித்தோம். அந்த மனு மீது இதுவரை எந்த நடவடிக் கையும் அதிகாரிகள் எடுக்க வில்லை. எனவே, நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விரைவில் முற்றுகைப்போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம்’’ என்றனர்.
இது தொடர்பாக நகராட்சி அலுவலர்களிடம் கேட்டபோது, ‘‘கரோனா ஊரடங்கால் சாலை அமைக்கும் பணிகள் தடைபட்டுள் ளன. மேலும், பொதுமக்கள் நிதி திரட்டி வழங்க வேண்டும் என நகராட்சி அலுவலர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உண்மை தன்மை இருந்தால் நிச்சயமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரத்தில், திரு.வி.க. நகர் மட்டும் அல்ல நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேதமடைந்த அனைத்துச் சாலைகளும் விரைவில் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.