

குமராட்சி அருகே உள்ள திரு நாரையூரில் இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது.வேளாண் துணை இயக்குநர் (மாநிலத்திட்டம்) ரமேஷ் தலைமை தாங்கினார். குமராட்சி வேளாண் உதவி இயக்குநர் அமிர்தராஜ், உதவி வேளாண் அலுவலர் குணச்சந்திரன், தொழில் நுட்ப மேலாளர் பாலசுப்பிரமணியன், உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் தண்டபாணி, பிரகாஷ் ஆகியோர் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். இதில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியில் செந்தமிழ் மரபுவழி வேளாண் நடுவம் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கண்ணதாசன், அமைப்பாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் அனுப வங்கள், இயற்கை இடு பொருட்களான பஞ்சகவியம், பூச்சிவிரட்டி தயாரிப்பு மற்றும் செய்முறை பயிற்சி அளித்தனர்.
இக்குழுவினர் இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுடன் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.