

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
2021-ம் ஆண்டுக்கான மத்தியஅரசின் ஜீவன் ரக்ஷா பதக்கவிருதுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துகள் உள்ளிட்ட பல்வேறு விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுமனித உயிர்களை காப்பாற்றியவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
விருதுக்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான www.sdat.tn.gov.in ன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்தவிண்ணப்பங்களை பாளையங்கோட்டை அண்ணா விளை யாட்டரங்கத்திலுள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0462-2572632 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட் டுள்ளது.