

பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வுக்கு எதிராக மத்திய அரசைக் கண்டித்து புதுக் கோட்டை மாவட்டம் கறம்பக்குடி யில் மாதர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கறம்பக்குடி சீனி கடை முக்கத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.சலோமி தலைமை வகித்தார். இதில், கலந்துகொண்ட பெண்கள், சாலையோரம் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக ஒப்பாரி வைத்தனர்.