பாம்புகளின் இனப்பெருக்க காலம் என்பதால் - இரவு நேரங்களில் கதவை திறந்து வைக்க வேண்டாம் : திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் வேண்டுகோள்

பாம்புகளின் இனப்பெருக்க காலம் என்பதால் -  இரவு நேரங்களில் கதவை திறந்து வைக்க வேண்டாம் :  திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் வேண்டுகோள்
Updated on
1 min read

பாம்புகளின் இனப்பெருக்க காலம் என்பதால் கிராமப் பகுதிகளிலும், வனப்பகுதியையொட்டி வசிப்பவர்களும் இரவு நேரங்களில் வெளியே படுத்து உறங்கவோ, கதவை திறந்து வைக்கவோ வேண்டாம் என திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலிஅடுத்த கதிரிமங்கலத்தைச் சேர்ந்தவர் விவசாயி பரந்தாமன்(45). இவர், நேற்று காலை வீட்டு சமையல் அறைக்கு சென்றபோது, அங்கு நாகப்பாம்பு ஒன்று படமெடுத்து ஆடியதை கண்டு அதிர்ச்சியடைந் தார். பின்னர், கூச்சலிட்டபடி வெளியே ஓடி வந்தார். இதுகுறித்து பரந்தாமனின் குடும்பத்தினர், திருப் பத்தூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் திருப்பத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு நாகப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பிறகு, அந்த பாம்பை வனத் துறையினர் அருகேஉள்ள காப்புக்காட்டில் விட்டனர்.

இது குறித்து திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் பிரபு கூறிய தாவது, “தற்போது மழைக்காலம் என்பதாலும், பாம்புகளின் இனப்பெருக்க காலம் என்பதால் பாம்புகள் வனப்பகுதியை விட்டு வெளியே வந்து அருகாமையில் உள்ள குடியிருப்புகளில் நுழைய அதிக வாய்ப்புள்ளது. எனவே, கிராமப் பகுதிகள், வயல் வெளிகளுக்கு, வனப்பகுதியையொட்டி வசிப்பவர்கள்பாதுகாப்பாக இருக்க வேண்டும்.இரவு நேரங்களில் கதவை திறந்து வைக்க வேண்டாம்.

அதேநேரத்தில் பாம்புகளை கண்டால் அதை அடிக்கவோ, ஆயுதங்களால் தாக்கவோ யாரும் முற்படக்கூடாது. பாம்புகளை கண்ட அடுத்த நிமிடம் வனத்துறை யினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in