

ஈரோட்டில் கரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக கடந்த இரு மாதங்களாக விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில், இம்மாத விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் 23-ம் தேதி காலை 10.30 மணிக்கு, ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தலைமையில் நடக்கிறது.
ஈரோடு மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்கள் மற்றும் வேளாண்மை இணை இயக்குநர், அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக கூட்டத்தில் பங்கேற்கலாம்.
மேலும், தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வழங்கலாம். விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியரக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.