விழுப்புரம் மாவட்டத்தில் - தடுப்பூசி போட்டால் மட்டுமே 100 நாள் வேலைக்கு அனுமதி :

விழுப்புரம் மாவட்டத்தில் -  தடுப்பூசி போட்டால் மட்டுமே 100 நாள் வேலைக்கு அனுமதி  :
Updated on
1 min read

இந்தியாவில் கரோனாவை கட்டுப் படுத்த கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், போலீ ஸார் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அடுத்தகட்டமாக மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. ஆரம்பத்தில் தடுப்பூசி போடுவதில் யாரும் பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை.

விழுப்புரம் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18.49 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் முதல் டோஸ், பூஸ்டர் டோஸ் என நேற்று முன்தினம் வரை 3,65,198 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட முகாம்கள் மூலம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தற்போது கிராமப் புறங்களில்தடுப்பூசி போட்டுக் கொள்ளா தவர்கள் அதிகம் உள்ளதால் தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணியாற்ற வருகிறவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ் காட்டினால் தான் வேலை வழங்கப்படும் என ஊரக வளர்ச்சித்துறையினர் செயல்படுத்தி வருகின்றனர்.

இதனால் தற்போது கிராமப் புறங்களில் தடுப்பூசி போட்டுகொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின் றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in