தமிழகத்தில் ரூ.12 கோடி மதிப்பில் 6 கூட்டுறவு நூற்பாலைகள் மேம்படுத்த நடவடிக்கை : கைத்தறித்துறை அமைச்சர் தகவல்

தமிழகத்தில் ரூ.12 கோடி மதிப்பில் 6 கூட்டுறவு நூற்பாலைகள் மேம்படுத்த நடவடிக்கை :  கைத்தறித்துறை அமைச்சர் தகவல்
Updated on
1 min read

தமிழகத்தில் ரூ-.12 கோடி மதிப்பில் 6 கூட்டுறவு நூற்பாலைகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஊத்தங்கரையில் கைத்தறி மற்றும் துணி, நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில், ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ், பர்கூர் எம்எல்ஏ மதியழகன் ஆகியோர் உடனிருந் தனர். அப்போது அமைச்சர் கூறியதாவது:

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை, ஊத்தங்கரை, கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை, ஆரல்வாய்மொழி, துத்துக்குடி மாவட்ட பாரதி கூட்டுறவு நூற்பாலை, எட்டையபுரம், தேனி அண்ணா கூட்டுறவு நூற்பாலை, புதுக்கோட்டை கூட்டுறவு நூற்பாலை, அறந்தாங்கி, ராமநாதபுரம் கூட்டுறவு நூற்பாலை ஆகிய 6 நூற்பாலைகள் ரூ.12 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். அதில், முதற்கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து மீதமுள்ள நூற்பாலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார்.

இதனை தொடர்ந்து நூற் பாலையில் பணி ஓய்வு பெற்ற 2 பணியாளர்களுக்கு பணிக்கொடை நிலுவைத் தொகை தலா ரூ.50 ஆயிரத்திற்கான காசோலைகள் மற்றும் ஒரு பணியாளருக்கு மருத் துவ செலவிற்காக ரூ.10,000-க்கான காசோலையை வழங்கினார். துணி, நூல் இயக்குநர் சாரதிசுப்ராஜ், மேலாண்மை இயக்குநர் வரதராஜன், மேலாளர் அமல்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in